Mobirise Mobirise v4.7.1




100% கரிம உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள்

கரிம உரங்கள்

எங்கள் தயாரிப்புகள் தாவரங்கள் மற்றும் கரிமப் பொருட்களிலிருந்து பெறப்பட்டவை. இவை தாவரங்களுக்கு வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன.

கரிம பூச்சிக்கொல்லிகள்

எங்கள் பூச்சிக்கொல்லிகள் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை. இவை பூச்சிகள் மற்றும் பூஞ்சை தாக்குதல்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகின்றன.

நுகர்வோர் தயாரிப்புகள்

திறன் மிக்க பாக்டீரியா உங்கள் செப்டிக் தொட்டிகள் மற்றும் கழிப்பறை குழாய்களிலிருந்து கசடு மற்றும் திடக்கழிவுகளை சுத்தம் செய்ய உதவுகிறது.

ஜெயினோ பயோ தயாரிப்புகள்

வீட்டுத் தோட்டம்

பூக்கள், காய்கறி மற்றும் பழங்களைக் கொண்ட வீடு, சமையலறை அல்லது மொட்டை மாடி தோட்டங்கள் வீட்டுத் தேவைகளுக்கு உதவுகின்றன. நீங்கள் வளர்க்கும் சுவையான பழங்கள், காய்கறிகள் மற்றும் மூலிகைகள் உங்கள் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. எனவே, உங்கள் தோட்டக் கருவிகளை பயன்படுத்தி அற்புதமான ஒரு தோட்டத்தை உருவாக்குங்கள்!

வேளாண்மை

சாகுபடி செய்யக்கூடிய நிலம் மற்றும் நீர் வளங்கலின் குறைவு, ஒழுங்கற்ற வானிலை, பூச்சிக்கொல்லி எதிர்ப்பு பூச்சிகள் மற்றும் இடைத்தரகர்கள் கொடுமை ஆகிய பிரச்சினைகள் விவசாயின் வாழ்க்கையை மிகவும் சிரமமாக்குகின்றன. எங்கள் கரிம பூச்சிக்கொல்லிகள் பூச்சிகளை தாக்கி கொல்வதில் திறமையாக செயல்படுகின்றன.

வீட்டு உபயோக பொருட்கள்

ஜெய்னா செப்டோ பூஸ்டர்ஸ் என்பது காற்றில்லா (ஆக்சிஜன் குறைவான இடத்தில் வாழக்கூடிய) பாக்டீரியாக்களின் கூட்டமைப்பு, இது உங்கள் செப்டிக் தொட்டிகளில் உள்ள மலப் பொருளை ஜீரணிக்க உதவுகிறது. அடுக்குமாடி குடியிருப்புகள் பங்களாக்கள், பண்ணை வீடுகள், சங்கங்கள், தொழிற்சாலைகள், பள்ளிகள், அலுவலக வளாகங்கள், ஹோட்டல் மற்றும் ரிசார்ட்ஸ் போன்ற எவருக்கும் இந்த தயாரிப்பு பயனுள்ளதாக இருக்கும்.

எங்களைப் பற்றி


ஜெய்னா பயோ சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு உதவும் விவசாய உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் தயாரிப்பு நிறுவனமாகும், இது கரிம உரங்கள், மண் மேம்பாடு மற்றும் தாவர மேலாண்மை தயாரிப்புகளை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. உங்கள் தாவரங்களை வளர்க்க உதவும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட உயர்தர, பாதுகாப்பான மற்றும் எளிதில் கையாளக்கூடிய கரிம உரங்களை வழங்குகிறது. எங்கள் தயாரிப்புகள் மாறுபட்ட புவியியல் மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகளில் செயல்பட வடிவமைக்கப்பட்டுள்ளன. எங்கள் தயாரிப்புகளைப் பயன்படுத்தும் வேளாண் திட்டங்கள் மண்ணை மேம்படுத்தி, உங்கள் பயிர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் உங்கள் ஒட்டுமொத்த மகசூலை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களை வழங்கும்.

எங்கள் தரத்தின் அடையாளமாக அர்ப்பணிப்புள்ள விஞ்ஞானிகள், தாவரவியலாளர்கள், நுண்ணுயிரியலாளர்கள் மற்றும் விவசாயிகள் விளங்குகின்றனர். இது இந்திய தோட்டக்காரர் மற்றும் விவசாயியின் எதிர்பார்ப்புகளை மீறுவதற்கு ஆர்வத்துடன் செயல்படுகிறது.

எங்கள் தயாரிப்புகள் கரிம உற்பத்திக்கான தேசிய தரங்களின் அடிப்படையில் INDOCERT ஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த சான்றிதழ் பரிந்துரைக்கப்பட்ட இந்திய தேசிய தரங்களுக்கு கடுமையான இணக்கத்தை உறுதிப்படுத்துகிறது.

கரிம உரங்கள்

100% கரிம சான்றளிக்கப்பட்ட உரங்கள்

humic acid

ஹ்யூமிக் அமிலம் (பயோ ஹும்)

ஹ்யூமிக் அமிலம் மண்ணின் நீர் இருப்பு திறனை மேம்படுத்த பயன்படுத்தப்படுகிறது. மேம்படுத்தப்பட்ட நுண்ணுயிர் வளர்ச்சி, சிறந்த ஒட்டுமொத்த மண் அமைப்பு, நச்சுகள் குறைதல் மற்றும் ஊட்டச்சத்து அதிகரிப்பிற்கு உதவுகிறது. இதனால் உறுதியான வேர்கள் உருவாகி செடிகளை செழிமையாக்குகின்றன.

eCommerce Website Template Cafe

என் பி கே நுண்ணுயிரி (என் பி கே பாக்டீரியா)

தாவர வளர்ச்சியின் அனைத்து வாழ்க்கை நிலைகளிலும் அவசியமான நைட்ரஜன் ஃபிக்ஸிங் பாக்டீரியா, பாஸ்பேட் கரைதிறக்கும் பாக்டீரியா மற்றும் பொட்டாசியம் கரைக்கும் பாக்டீரியா இதில் உள்ளன. இவை ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைகின்றன.

eCommerce Website Template Cafe

அழுத்த நிவாரணி (ஸ்ட்ரெஸ் ரெலியப்)

தண்ணீர் இல்லாததால் அல்லது அதிகப்படியான நீர் காரணமாக தாவரங்கள் அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும். ஜீனாவின் அழுத்த நிவாரணி தாவரங்கள் தண்ணீர் இல்லாவிட்டாலும் வாடாமல் இருக்க உதவுகிறது. நீர் தேங்கி நிற்கும் போதும் தாவர வேர்களை இது பாதுகாக்கிறது.

eCommerce Website Template Cafe

நைட்ரஜன் ரிச்

இது ஒரு உயர் நைட்ரஜன் உரமாகும், இது அனைத்து தாவரங்களிலும் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதை ஒரு திரவ உரமாகவும், தோட்டங்கள் மற்றும் பயிர்களுக்கு தண்ணீரில் கலந்து செடியில் தெளிக்கும் உரமாகவும் பயன்படுத்தலாம்.

eCommerce Website Template Cafe

பாஸ்போ ரிச்

இது கீழிருந்து மேலாக ஆரோக்கியமான தாவரத்தை உருவாக்குகிறது. ஏறக்குறைய ஒவ்வொரு வகை தாவரங்களும் இதில் செழித்து வளர்கின்றன. பழங்கள் மற்றும் காய்கறிகளின் தோற்றத்தையும் சுவையையும் மேம்படுத்த உதவுகிறது.

zaenabio

பொட்டாஷ் ரிச்

இந்த கரிம பொட்டாஷில் அதிக அளவு கரிம பாஸ்பரஸுடன் சரியான அளவு கரிம நைட்ரஜனுடன் கலக்கப்படுகிறது. இது பூவிற்கும் பழத்திற்கும் வளர்ச்சி ஆதரிப்பதன் மூலம் விளைச்சலை அதிகரிக்க உதவுகிறது.

வாடிக்கையாளர் தொடர்புக்கு(+91 861 072 8052)

கரிம பூச்சிக்கொல்லிகள்

100% கரிம சான்றளிக்கப்பட்ட பூச்சிக்கொல்லிகள்

eCommerce Website Template Cafe

உயிர் பூஞ்சை (பயோ பாங்கை)

இந்த கரிம பபூஞ்சாணக் கொல்லி நான்கு வெவ்வேறு பாக்டீரியாக்களின் கலவையாகும், இது பூஞ்சைகள் அல்லது பூஞ்சை வித்திகள் கொல்ல அல்லது தடை செய்ய பயன்படுத்தப்படுகிறது. இது இலைக்கருகல், இலைத் துரு, ஸ்மட்ஸ், ஆல்டர்னேரியா இலைப்புள்ளி, ஆந்த்ராக்னோஸ், நுண்துகள் பூஞ்சை காளான் மற்றும் டவுனி பூஞ்சை காளான் நோய்களைக் கட்டுப்படுத்துகிறது.

eCommerce Website Template Cafe

இலையழிப்பி கட்டுப்படுத்தி (டிஃபோலியேட்டர் கன்ட்ரோலர்)

மரங்கள், தாவரங்களின் இலைகளைத் தின்று விடும் தண்டு துளைப்பான், பழத்துளைப்பான், வெட்டுப் புழுக்கள், கொம்புபுழுக்கள் மற்றும் பல்வேறு வகையான புழுக்களைக் கொல்கிறது. தாவரங்கள் மற்றும் மரங்களின் இலை உதிர்தல் அதன் வளர்ச்சியை குறைக்கும்.

eCommerce Website Template Cafe

சிற்றுண்ணிகள் கட்டுப்படுத்தி (மைட்ஸ் கன்ட்ரோலர்)

இந்த பூஞ்சையின் சிதல்கள் பூச்சியின் தோலுடன் தொடர்பு கொள்ளும் போது அவை நேரடியாகத் தோலின் வழியாக அவற்றின் உள் பகுதிவரை வளர்கின்றன.இந்த சிறுபூச்சிக்கொல்லி சிலந்தி, பிராட் பூச்சி, ரஸ்செட் பூச்சி மற்றும் கேல் சிலந்திகளை கட்டுப்படுத்துகிறது.

eCommerce Website Template Cafe

மண் பூச்சி கட்டுப்படுத்தி (சாயில் இன்செக்ட் கன்ட்ரோலர்)

இது பல ஈ இனங்களின் முட்டைப்புழு (ஸ்சிரைடே, போரிடே, இலைத் துளைப்பான், ஈ) மற்றும் சில அந்துப்பூச்சிகளின் முட்டைப்புழு கட்டுப்பாடுக்கு எதிராக மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இலக்கு பூச்சிகள் பின்வருமாறு: பூஞ்சை ஈக்கள், காளான் ஈக்கள், பழ ஈக்கள், தத்து வண்டு, ரம்பம் ஈக்கள், கொக்கு ஈக்கள், கடற்கரை ஈக்கள் மற்றும் பழ ஈக்கள்.

eCommerce Website Template Cafe

உறிஞ்சும் பூச்சி கட்டுப்படுத்தி (சக்கிங் பெஸ்ட் கன்ட்ரோலர்)

பொதுவாக காணப்படும் தாவரங்களின் சாறுகளை உறிஞ்சும் பூச்சிகளாகிய வெள்ளை ஈக்கள் (அஸ்வினி பூச்சி) தாவரங்களில் வைரஸ் பரவலுக்கு பொறுப்பாகும்.பயன்பாட்டில் உள்ள மற்ற கரிம உறிஞ்சும் பூச்சி கட்டுப்பாட்டு முறைகள் பெரும்பாலான இந்த பூச்சிகளை விரட்டிவிடும், ஆனால் எங்கள் தயாரிப்பு அவைகளை கொல்கிறது. இது இலைப்பேனுக்கு எதிராகவும் பயனுள்ளதாக இருக்கும்.

eCommerce Website Template Cafe

நூற்புழு கட்டுப்படுத்தி (நெமடோட் கன்ட்ரோலர்)

தாவர ஒட்டுண்ணிகள் மனித கண்களுக்குத் தெரியாதவை, ஆனால் பயிர்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. நல்ல நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும் உங்கள் செடி ஆரோக்கியமற்றதாக இருந்தால் நூற்புழுக்களால் தாக்கப்பட்டிருக்கலாம். இந்த நெமேட்டிசைட், நூற்புழுக்களைக் கொன்று, வேர் முடிச்சு, நீர்க்கட்டி, வேர்ப்புண், சுருள் மற்றும் குழிதல் ஆகியவற்றிலிருந்து உங்கள் தாவர வேர்களைக் காக்கின்றது.

முகவரி

657, டிரிஸ்டார் டவர்ஸ், 3 வது மாடி,
அவினாஷி ரோடு,
கோவை, தமிழ்நாடு - 641037

தொடர்புகள்

மின்னஞ்சல்: info@zaenabio.com
தொலைபேசி: 91 924 454 2225

திறப்பு நேரங்கள்

திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி ஞாயிறு
09:00 - 21:00 09:00 - 21:00 09:00 - 21:00 09:00 - 21:00 09:00 - 21:00 09:00 - 21:00 09:00 - 21:00

தொடர்பில் இருங்கள்