
எங்கள் தயாரிப்புகள் தாவரங்கள் மற்றும் கரிமப் பொருட்களிலிருந்து பெறப்பட்டவை. இவை தாவரங்களுக்கு வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன.
எங்கள் பூச்சிக்கொல்லிகள் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை. இவை பூச்சிகள் மற்றும் பூஞ்சை தாக்குதல்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகின்றன.
திறன் மிக்க பாக்டீரியா உங்கள் செப்டிக் தொட்டிகள் மற்றும் கழிப்பறை குழாய்களிலிருந்து கசடு மற்றும் திடக்கழிவுகளை சுத்தம் செய்ய உதவுகிறது.
பூக்கள், காய்கறி மற்றும் பழங்களைக் கொண்ட வீடு, சமையலறை அல்லது மொட்டை மாடி தோட்டங்கள் வீட்டுத் தேவைகளுக்கு உதவுகின்றன. நீங்கள் வளர்க்கும் சுவையான பழங்கள், காய்கறிகள் மற்றும் மூலிகைகள் உங்கள் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. எனவே, உங்கள் தோட்டக் கருவிகளை பயன்படுத்தி அற்புதமான ஒரு தோட்டத்தை உருவாக்குங்கள்!
சாகுபடி செய்யக்கூடிய நிலம் மற்றும் நீர் வளங்கலின் குறைவு, ஒழுங்கற்ற வானிலை, பூச்சிக்கொல்லி எதிர்ப்பு பூச்சிகள் மற்றும் இடைத்தரகர்கள் கொடுமை ஆகிய பிரச்சினைகள் விவசாயின் வாழ்க்கையை மிகவும் சிரமமாக்குகின்றன. எங்கள் கரிம பூச்சிக்கொல்லிகள் பூச்சிகளை தாக்கி கொல்வதில் திறமையாக செயல்படுகின்றன.
ஜெய்னா செப்டோ பூஸ்டர்ஸ் என்பது காற்றில்லா (ஆக்சிஜன் குறைவான இடத்தில் வாழக்கூடிய) பாக்டீரியாக்களின் கூட்டமைப்பு, இது உங்கள் செப்டிக் தொட்டிகளில் உள்ள மலப் பொருளை ஜீரணிக்க உதவுகிறது. அடுக்குமாடி குடியிருப்புகள் பங்களாக்கள், பண்ணை வீடுகள், சங்கங்கள், தொழிற்சாலைகள், பள்ளிகள், அலுவலக வளாகங்கள், ஹோட்டல் மற்றும் ரிசார்ட்ஸ் போன்ற எவருக்கும் இந்த தயாரிப்பு பயனுள்ளதாக இருக்கும்.
ஹ்யூமிக் அமிலம் மண்ணின் நீர் இருப்பு திறனை மேம்படுத்த பயன்படுத்தப்படுகிறது. மேம்படுத்தப்பட்ட நுண்ணுயிர் வளர்ச்சி, சிறந்த ஒட்டுமொத்த மண் அமைப்பு, நச்சுகள் குறைதல் மற்றும் ஊட்டச்சத்து அதிகரிப்பிற்கு உதவுகிறது. இதனால் உறுதியான வேர்கள் உருவாகி செடிகளை செழிமையாக்குகின்றன.
தாவர வளர்ச்சியின் அனைத்து வாழ்க்கை நிலைகளிலும் அவசியமான நைட்ரஜன் ஃபிக்ஸிங் பாக்டீரியா, பாஸ்பேட் கரைதிறக்கும் பாக்டீரியா மற்றும் பொட்டாசியம் கரைக்கும் பாக்டீரியா இதில் உள்ளன. இவை ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைகின்றன.
தண்ணீர் இல்லாததால் அல்லது அதிகப்படியான நீர் காரணமாக தாவரங்கள் அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும். ஜீனாவின் அழுத்த நிவாரணி தாவரங்கள் தண்ணீர் இல்லாவிட்டாலும் வாடாமல் இருக்க உதவுகிறது. நீர் தேங்கி நிற்கும் போதும் தாவர வேர்களை இது பாதுகாக்கிறது.
இது ஒரு உயர் நைட்ரஜன் உரமாகும், இது அனைத்து தாவரங்களிலும் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதை ஒரு திரவ உரமாகவும், தோட்டங்கள் மற்றும் பயிர்களுக்கு தண்ணீரில் கலந்து செடியில் தெளிக்கும் உரமாகவும் பயன்படுத்தலாம்.
இது கீழிருந்து மேலாக ஆரோக்கியமான தாவரத்தை உருவாக்குகிறது. ஏறக்குறைய ஒவ்வொரு வகை தாவரங்களும் இதில் செழித்து வளர்கின்றன. பழங்கள் மற்றும் காய்கறிகளின் தோற்றத்தையும் சுவையையும் மேம்படுத்த உதவுகிறது.
இந்த கரிம பொட்டாஷில் அதிக அளவு கரிம பாஸ்பரஸுடன் சரியான அளவு கரிம நைட்ரஜனுடன் கலக்கப்படுகிறது. இது பூவிற்கும் பழத்திற்கும் வளர்ச்சி ஆதரிப்பதன் மூலம் விளைச்சலை அதிகரிக்க உதவுகிறது.
இந்த கரிம பபூஞ்சாணக் கொல்லி நான்கு வெவ்வேறு பாக்டீரியாக்களின் கலவையாகும், இது பூஞ்சைகள் அல்லது பூஞ்சை வித்திகள் கொல்ல அல்லது தடை செய்ய பயன்படுத்தப்படுகிறது. இது இலைக்கருகல், இலைத் துரு, ஸ்மட்ஸ், ஆல்டர்னேரியா இலைப்புள்ளி, ஆந்த்ராக்னோஸ், நுண்துகள் பூஞ்சை காளான் மற்றும் டவுனி பூஞ்சை காளான் நோய்களைக் கட்டுப்படுத்துகிறது.
மரங்கள், தாவரங்களின் இலைகளைத் தின்று விடும் தண்டு துளைப்பான், பழத்துளைப்பான், வெட்டுப் புழுக்கள், கொம்புபுழுக்கள் மற்றும் பல்வேறு வகையான புழுக்களைக் கொல்கிறது. தாவரங்கள் மற்றும் மரங்களின் இலை உதிர்தல் அதன் வளர்ச்சியை குறைக்கும்.
இந்த பூஞ்சையின் சிதல்கள் பூச்சியின் தோலுடன் தொடர்பு கொள்ளும் போது அவை நேரடியாகத் தோலின் வழியாக அவற்றின் உள் பகுதிவரை வளர்கின்றன.இந்த சிறுபூச்சிக்கொல்லி சிலந்தி, பிராட் பூச்சி, ரஸ்செட் பூச்சி மற்றும் கேல் சிலந்திகளை கட்டுப்படுத்துகிறது.
இது பல ஈ இனங்களின் முட்டைப்புழு (ஸ்சிரைடே, போரிடே, இலைத் துளைப்பான், ஈ) மற்றும் சில அந்துப்பூச்சிகளின் முட்டைப்புழு கட்டுப்பாடுக்கு எதிராக மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இலக்கு பூச்சிகள் பின்வருமாறு: பூஞ்சை ஈக்கள், காளான் ஈக்கள், பழ ஈக்கள், தத்து வண்டு, ரம்பம் ஈக்கள், கொக்கு ஈக்கள், கடற்கரை ஈக்கள் மற்றும் பழ ஈக்கள்.
பொதுவாக காணப்படும் தாவரங்களின் சாறுகளை உறிஞ்சும் பூச்சிகளாகிய வெள்ளை ஈக்கள் (அஸ்வினி பூச்சி) தாவரங்களில் வைரஸ் பரவலுக்கு பொறுப்பாகும்.பயன்பாட்டில் உள்ள மற்ற கரிம உறிஞ்சும் பூச்சி கட்டுப்பாட்டு முறைகள் பெரும்பாலான இந்த பூச்சிகளை விரட்டிவிடும், ஆனால் எங்கள் தயாரிப்பு அவைகளை கொல்கிறது. இது இலைப்பேனுக்கு எதிராகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தாவர ஒட்டுண்ணிகள் மனித கண்களுக்குத் தெரியாதவை, ஆனால் பயிர்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. நல்ல நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும் உங்கள் செடி ஆரோக்கியமற்றதாக இருந்தால் நூற்புழுக்களால் தாக்கப்பட்டிருக்கலாம். இந்த நெமேட்டிசைட், நூற்புழுக்களைக் கொன்று, வேர் முடிச்சு, நீர்க்கட்டி, வேர்ப்புண், சுருள் மற்றும் குழிதல் ஆகியவற்றிலிருந்து உங்கள் தாவர வேர்களைக் காக்கின்றது.