Mobirise Mobirise v4.7.1

Zaena Bio Blogs


உரங்கள் மற்றும் உரங்களின் வகைகள்

உரங்கள் (fertilizers) என்பது விளை நிலத்தில் உள்ள ஊட்டச்சத்துகளைப் பெருக்கும் பொருட்டு இடப்படுவதாகும். மண்ணில் குறைந்து வரும் இயற்கையான சத்துப் பொருட்களை ஈடு செய்யும் பொருட்டு செயற்கையான சத்துப் பொருளை மண்ணுக்கு ஊட்டுவது ‘உரம்இடுதல்’ ஆகும்.
மண்ணில் நைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம், கந்தகம், இரும்பு முதலிய வேதியல் பொருட்கள் கலந்துள்ளன.
இவையே தாவரங்களுக்குத் தேவையான வேதியியல் சத்துப் பொருட்கள் ஆகும். காற்றிலிருந்தும் கூட சத்துப் பொருட்களைத் தாவரங்கள் சேமித்து வளர்கின்றன.
மண்ணில் உள்ள இவ்வியற்கைச் சத்துப் பொருட்கள் தாவரங்களின் வளர்ச்சிக்கு ஒவ்வொரு நிலையிலும் உறுதுணை புரிகின்றன.
உரங்களின் வகைகள்
ஊட்டச்சத்துக்களின் நிலை, எண்ணிக்கை மற்றும் தன்மையைப் பொறுத்து உரங்கள் வகைப்படுத்தப்படுகின்றன.
ஊட்டச்சத்துக்களின் நிலையைப் பொறுத்த வகைப்பாடு
கரிம உரம் (Organic Fertilizer)
மண்ணின் இயற்பியல் பண்புகளை அதிகரிக்க, அதிக அளவு சேர்க்கப்படும் கரிமத்தை (C) கொண்டுள்ள இயற்கைப் பொருளே கரிம உரம் அல்லது இயற்கை உரம் எனப்படும். உம். தொழுஉரம், கம்போஸ்ட், பசுந்தாள் உரம், உயிர் உரம்.
ஜெயினோ பயோ கரிம உரங்கள்:

  • ஹ்யூமிக் அமிலம் (பயோ ஹும்)
  • என் பி கே நுண்ணுயிரி (என் பி கே பாக்டீரியா)
  • அழுத்த நிவாரணி (ஸ்ட்ரெஸ் ரெலியப்)
  • நைட்ரஜன் ரிச்
  • பாஸ்போ ரிச்
  • பொட்டாஷ் ரிச்

கனிம உரம் (Inorganic Fertilizer)
பயிருக்குத் தேவையான ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை அளிக்கும் செயற்கைப் பொருளுக்கு கனிம உரம் அல்லது செயற்கை உரம் என்று பெயர். உ.ம், யூரியா, டைஅம்மோனியம் பாஸ்பேட், ஃபெர்ரஸ் சல்பேட் ஊட்டச்சத்துக்களின் எண்ணிக்கையைப் பொறுத்த வகைப்பாடு
நேரடி உரம் (Straight Fertilizer)
பேரூட்டச்சத்துக்களில் ஏதாவது ஒன்றை மட்டும் அளிக்கும் உரம் நேரடி உரம் எனப்படும். உ.ம். யூரியா – தழைச்சத்து சூப்பர் பாஸ்பேட் – மணிச்சத்து மியூரேட் ஆப்பொட்டாஷ்-சாம்பல் சத்து
கலப்பு உரம் (Mixed Fertilizer)
இரண்டு அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட நேரடி உரங்கள் சேர்ந்த கலவைக்கு கலப்பு உரம் என்று பெயர். கலப்பு உரம் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்கள் மூன்றையும் அளித்தால் அது முழுமையான உரம் எனப்படும். உ.ம். NO. 10 கலப்பு உரம், No. 8 கலப்பு உரம்
கூட்டு உரம் (Complex Fertilizer)
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பயிர் ஊட்டச்சத்துக்களை ரசாயன முறைப்படி சேர்க்கப்பட்ட உரத்திற்கு கூட்டு உரம் என்று பெயர். உ.ம். 17:17:17 காம்ப்ளெக்ஸ், 19:19:19 காம்ப்ளெக்ஸ்
உரங்களின் தன்மையைப் பொறுத்த வகைப்பாடு
அமில உரங்கள் (Acidic Fertilizers) நிலத்தில் இவ்வகை உரங்களை தொடர்ந்து இடுவதால் அமிலத்தன்மை அதிகரிக்கும். உ.ம். அம்மோனியம் சல்பேட், ஜிப்சம்.
கார உரங்கள் (Basic Fertilizers)
நிலத்தில் இவ்வகை உரங்களை தொடர்ந்து இடுவதால், காரத்தன்மையை ஏற்படுத்தி நிலத்தின் காரநிலையை அதிகரிக்கும். உ.ம். சோடியம் நைட்ரேட்
நடுநிலை உரங்கள் (Neutral Fertilizers)
இவ்வகை உரங்களை இடுவதால் நிலத்தில் அமிலத்தன்மையோ காரத்தன்மையோ ஏற்படுவதில்லை. உம். சூப்பர் பாஸ்பேட், பாறை பாஸ்பேட், கால்சியம் அம்மோனியம் நைட்ரேட்டு


HOW TO START & GROWING AN ORGANIC VEGETABLE GARDEN

Growing organic vegetables means your family can enjoy healthy, tasty, fresh produce free of synthetic chemicals or pesticides. Some of the organic gardening basics are the same as nonorganic. Plant in an area that gets full sun, at least 6 hours a day (8 to 10 hours is even better). All gardens require frequent watering, so make sure you have a spigot and hose that will reach all corners of your plot.

GETTING STARTED WITH ORGANIC GARDENING
In its simplest form, organic gardening means gardening without man-made chemicals. Instead of synthetic ingredients, organic gardeners rely on ingredients that occur naturally and that work in harmony with the natural goodness that comes from healthy, productive soil.
Organic gardening has many levels. Commercial market gardeners must meet very strict guidelines to produce and process certified-organic foods, but many home gardeners may focus simply on nurturing their soil and plants with organic and natural-based products that avoid chemical residues in foods and the environment. You can enjoy the benefits of an organic approach to gardening, whatever level works for you and your family.

TIPS FOR GROWING AN ORGANIC VEGETABLE GARDEN
1. Prepare the soil before planting
2. Choose the right plants for your region and conditions
3. Plant flowers in or near the garden to attract bees and other pollinators.
4. Make your own organic compost and mulch.
5.Feeding your garden the best organic fertilizers

Benefits of Growing an Organic Vegetable Garden

  • Easy access to fresh produce
  • Improved taste due to freshness and lack of chemicals
  • Save money
  • Improved nutrition
  • Reduce exposure to harmful chemicals
  • Does not harm the water table
  • Kinder to the environment
  • Improves biodiversity


விளை நிலங்களை தாக்கும் பூச்சிகள் மற்றும் உயிர் கொல்லிகள்

விளை நிலங்களை தாக்கும் பூச்சிகளின் வகைகள்:



1. மெல்லும் பூச்சிகள்:

இவை வேர், தண்டு, இலைகளைக் கடித்து மெல்லும் பூச்சிகள் ஆகும். எ.கா. வெட்டுக்கிளிகள், கம்பளிப் பூச்சிகள் போன்றவை.

2. உறிஞ்சும் பூச்சிகள் :
இவை செல்சாற்றினை உறிஞ்சும் பூச்சிகள். எ.கா. இலைத்தத்துப் பூச்சிகள் , அசுவனி ( தாவரப்பேன் ) போன்றவை.

3. துளைக்கும் பூச்சிகள் :

இவை தாவரத்தின் பல பகுதிகளை துளைத்து தாவரத் திசுக்களை உணவாக எடுத்துக்கொள்ளும். எ.கா. கரும்புத்துளைப்பான்.

உயிர்க்கொல்லிகள்:
தாவரங்களுக்கும், பயிர்களுக்கும் தீங்கிழைக்கும் பூச்சித் தீங்குயிரிகளை அழிக்கப் பயன்படும் வேதிப்பொருட்கள் உயிர்க்கொல்லிகள் எனப்படும்.
உயிர்க்கொல்லிகள் மூன்று வகைப்படும். அவை,
1. பூச்சிக்கொல்லிகள் ( Pesticides )
2. பூஞ்சை அல்லது காளான் கொல்லிகள் ( Fungicides )
3. களைக்கொல்லிகள் ( Herbicides )

1. பூச்சிக்கொல்லிகள் ( Pesticides )

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் வேளாண்மையில் கிட்டதட்ட 20 % பொருளாதார இழப்பு தீங்கிழைக்கும் பூச்சிகளால் ஏற்பட்டது. இவற்றை தடுக்க பூச்சிக்கொல்லிகள் தயாரிக்கப்பட்டன. பூச்சிக்கொல்லிகள் பூச்சிகளை விரட்ட, அழிக்க மற்றும் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. விவசாய நிலங்களில் இது பூச்சிகளை அழிப்பதோடு தேவையற்ற களைகளை அழிக்கவும், பூஞ்சைகளை அகற்றவும், மைக்ரோ உயிரினங்களை அழிக்கவும் உதவுகிறது. ஜெயினோ பயோ விவசாய நிலங்கள் மற்றும் வீட்டு மாடித் தோட்டத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகளை வாங்க இங்கே கிளிக் செய்யவும்.

2. பூஞ்சைக்கொல்லிகள் ( Fungicides ) : பூஞ்சைகளை கொல்லுவதற்கு பயன்படும் வேதிப்பொருட்கள் பூஞ்சைக்கொல்லிகள் ஆகும். எ.கா. போர்டாக்ஸ் கலவை. போர்டாக்ஸ் கலவை என்பது 2.24 கிலோ மயில்துத்தம், 2.24 கிலோ சுட்டச் சுண்ணாம்பு மற்றும் 50 காலன் தண்ணீர் கலந்த கலவை ஆகும்.

3. களைக்கொல்லிகள் ( Herbicides ) :

பயிர்களில் தேவையற்ற களைச்செடிகளை நீக்குவதற்கு பயன்படுத்தும் வேதிப்பொருள் களைக்கொல்லிகள் ஆகும்.
எ.கா. i) டாலபேன்
ii) மெட்டாக்ளோர்
iii) 2 , 4 -D ( 2,4 - டைகுளோரோ பீனாக்ஸி அசிட்டிக் அமிலம் ).


What is Trichoderma Viride & How It Interacts With Plants?



Trichoderma Viride
Trichoderma is a genus of soil-dwelling fungi found all over the world that are highly effective at colonizing many kinds of plant roots, and inhibiting fungi that cause many types of diseases. It was one of the first types of biofungicides commercially available.

Is Trichoderma Viride Bio Pesticides?
Trichoderma species are free-living fungi that are common in soil and root ecosystems. They are highly interactive in root, soil and foliar environments, and produce a variety of compounds that induce localized and systemic resistance responses in plants. Trichoderma have long been recognized as biocontrol agents for the control of plant diseases and for their ability to enhance root growth and development, crop productivity, resistance to abiotic stresses, and uptake and use of nutrients. However, adoption rate of biopesticides is very slow, compared to synthetic chemicals. Among different biopesticides, Trichoderma is most important, having many success stories. A number of successful products based on different species of Trichoderma have been commercialized in India. Trichoderma isolates are formulated using different organic and inorganic bearers either through solid or liquid fermentation technologies. They are used for seed treatment, seed bio-priming, seedling dip, soil application and foliar spray. For the management of plant diseases, application of Trichoderma formulations with strain mixtures performs better than individual strains. Commercialization of biopesticide products is primarily hindered due to poor shelf life.

HOW TRICHODERMA INTERACTS WITH PLANTS PLANT ROOT COLONIZATION
Once in the soil, this fungus colonizes the roots of plants. By growing on the roots and in the rhizosphere, it forms a physical barrier to prevent the growth of fungi that would otherwise cause disease on the plant.

Plants frequently produce chemicals to defend themselves, and Trichoderma is resistant to many of them, which helps it to colonize the roots. And it does this without interfering with other microbes that help the plants, such as mychorrhizae or Rhizobium (bacteria that fix nitrogen).

BIOFERTILIZATION
Trichoderma can improve plant health even in the absence of pathogens. The fungus grows best in soil that is acidic, and it helps create such an environment by secreting organic acids.

These acids have an additional effect that greatly benefits the plants – they can solubilize phosphates and mineral ions, such as iron, magnesium, and manganese. These means they facilitate dissolving of these minerals, making it easier for the plants to absorb them. Such nutrients are often in short supply in the soil.

STIMULATION OF PLANT DEFENSE MECHANISMS
You may not know that plants have immune systems. They are able to sense invasion by pathogens and activate cascades of responses to produce chemicals to protect themselves.
Trichoderma has been shown to be able to activate plant defense responses, which enables the plant to control some infections above the ground, but their effects are not limited to just soil-borne pathogens. An example is Botrytis, a debilitating aboveground fungus that is sometimes controlled using Trichoderma.
Features of Trichoderma viride:

  • 1, Through the protection and treatment, can effectively prevent and control root rot, cataplexy, blight, wilt, verticillium wilt, anthrax, and other soil-borne diseases;
  • 2, Improve the soil, break the knot, improve the soil permeability and oxygen supply of the root system;
  • 3. Promote root growth, make crop growth more vigorous and increase crop yield, etc.


எந்த தமிழ் மாதங்களில் என்னென்ன பயிர்கள் சாகுபடி செய்யலாம் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?

தமிழர்களிடையே பருவ காலத்தைப் பொருத்து விவசாய நிலங்களில் பயிரிடும் முறைகளும் உண்டு. வேளாண்மையை பொருத்தவரையில் பட்டம் என்பது காலநிலையைச் சார்ந்ததாகும். அதனால் குறிப்பிட்ட பட்டத்துக்கு ஏற்றவாறு பயிர் சாகுபடி செய்தல் இன்றியமையாததாகும்.
விவசாயிகள் ஆடிப்பட்டத்தில் அனைத்து தானியப் பயிர்களும் மற்றும் பெரும்பாலான காய்கறிப் பயிர்களும் சாகுபடி செய்வார்கள். தொடர்ந்து ஒரே பயிரை சாகுபடி செய்யாமல், மாற்றுப் பயிர்களை விளைவிக்கும்போது மாற்றுப் பயிர்களுக்கு முந்தைய பயிரின் கழிவுகள் எருவாகப் பயன்படுவதோடு முந்தைய பயிரில் தங்கி வாழ்ந்த நோய்க்கிருமிகள் அதிகம் புதுப்பயிரைத் தாக்குவது இல்லை. காய்கறிகள் மனிதர்களுக்கு சரிவிகித உணவு அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவை சுறுசுறுப்பான வாழ்க்கைக்கு உதவும் உயிர் சத்துக்கள், தாது உப்புக்கள், நார் சத்துக்களை வழங்குவதுடன் சக்திக்கு தேவைப்படும் மாவுச் சத்துக்களையும் அதிகமான அளவில் வழங்குகிறது. எனவே மாதவாரியான உள்நாடு மற்றும் வெளிநாடு சந்தைத் தேவையினை கருத்தில் கொண்டும், அதிக லாபம் பெறும் நோக்கத்தில் மாதாந்திர காய்கறிகளின் விலை விவரத்தினை அறிந்தும் பயிரிட வேண்டும். இப்போது எந்த தமிழ் மாதங்களுக்கு எந்தெந்த பயிர்கள் உகந்தது என்பது பற்றி பார்ப்போம். வாருங்கள்!

ஜனவரி: (மார்கழி, தை)
பருவ காலம்: முன்பனிக்காலம்
உகந்த பயிர்கள்: கரும்பு, சுரைக்காய், மிளகாய், பாகற்காய், தக்காளி, பூசணி, முள்ளங்கி, கீரைகள், வெங்காயம், கொத்தவரை, கத்தரி, அவரை.
பிப்ரவரி: (தை,மாசி)
பருவ காலங்கள்: முன்பனிக்காலம், பின்பனிக்காலம்
உகந்த பயிர்கள்: வெண்டை, கத்தரி, தக்காளி, மிளகாய், பாகற்காய், சுரைக்காய், கொத்தவரை, பீர்க்கங்காய், கோவைக்காய், அவரை, சூரியகாந்தி, உளுந்து, கம்பு, நாட்டுச்சோளம், கரும்பு, பருத்தி, கீரைகள்.
மார்ச்: (மாசி, பங்குனி)
பருவ காலம்: பின்பனிக்காலம்
உகந்த பயிர்கள்: வெண்டை, பாகற்காய், தக்காளி, கோவை, கொத்தவரை, பீர்க்கங்காய், சூரியகாந்தி, உளுந்து, கம்பு, நாட்டுச்சோளம், பருத்தி, கத்தரி
ஏப்ரல்: (பங்குனி, சித்திரை)
பருவ காலங்கள்: பின்பனிக்காலம், இளவேனில்காலம்
உகந்த பயிர்கள்: செடி முருங்கை, கொத்தவரை, வெண்டை, பீர்க்கங்காய், புடலை, பாகற்காய், அவரை, எள், கம்பு, நாட்டுச்சோளம்
மே: (சித்திரை, வைகாசி)
பருவ காலம்: இளவேனில்காலம்
உகந்த பயிர்கள்: செடி முருங்கை, கத்தரி, தக்காளி, கொத்தவரை, வெங்காயம், அவரை, எள், நாட்டுச்சோளம்
ஜூன்: (வைகாசி, ஆனி)
பருவ காலங்கள்: இளவேனில்காலம், முதுவேனில்காலம்
உகந்த பயிர்கள்: கொத்தவரை, கத்தரி, தக்காளி, கோவை, பூசணி, கீரைகள், வெண்டை, தென்னை
ஜூலை: (ஆனி, ஆடி)
பருவ காலம்: முதுவேனில்காலம்
உகந்த பயிர்கள்: மிளகாய், பாகற்காய், சுரைக்காய், பூசணி, பீர்க்கங்காய், முள்ளங்கி, வெண்டை, கொத்தவரை, தக்காளி, புடலை, எள், சூரியகாந்தி, உளுந்து, தென்னை, தட்டப்பயறு, துவரை, மொச்சை, பாசிப்பயறு
ஆகஸ்ட்: (ஆடி, ஆவணி)
பருவ காலங்கள்: முதுவேனில்காலம், கார்காலம்
உகந்த பயிர்கள்: முள்ளங்கி, பீர்க்கங்காய், பாகற்காய், மிளகாய், வெண்டை, சுரைக்காய், அவரை, கத்தரி, மிளகாய், சூரியகாந்தி, பருத்தி, பாசிப்பயறு, துவரை, மொச்சை
செப்டம்பர்: (ஆவணி, புரட்டாசி)
பருவ காலம்: கார்காலம்
உகந்த பயிர்கள்: செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி, கீரை, பீர்க்கங்காய், பூசணி, புடலை, அவரை, மிளகாய், நெல், பருத்தி
அக்டோபர்: (புரட்டாசி, ஐப்பசி)
பருவ காலங்கள்: கார்காலம், குளிர்காலம்
உகந்த பயிர்கள்: செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி, வெங்காயம், கொத்தவரை, சுண்டல், நெல், பருத்தி
நவம்பர்: (ஐப்பசி, கார்த்திகை)
பருவ காலம்: குளிர்காலம்
உகந்த பயிர்கள்: முருங்கை செடி, கத்தரி, தக்காளி, முள்ளங்கி, பூசணி, மிளகாய், கொத்தவரை, சூரியகாந்தி, சுண்டல், நெல், நாட்டுச்சோளம், தென்னை, கரும்பு, வாழை, மரவள்ளி
டிசம்பர்: (கார்த்திகை, மார்கழி)
பருவ காலங்கள்: குளிர்காலம், முன்பனிக்காலம்
உகந்த பயிர்கள்: வாழை, கத்தரி, சுரைக்காய், தக்காளி, பூசணி, மிளகாய், சுண்டல், நெல், நாட்டுச்சோளம், தென்னை, மரவள்ளி, முள்ளங்கி ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.


What are cutworms & How prevent cutworms in garden

What Are Cutworms?
“Cutworm” is the name used for the larvae of a number of species of adult moths. Eggs that hatch in the fall can produce larvae capable of overwintering in the soil or a woodpile. They do the most damage early in the gardening season, when they emerge from hibernation.
Cutworm Damage in the Garden
Identifying cutworms is not as easy as you might think since different species are different colors. Some are black, brown, grey or tan while others can be pink or green. Some have spots, other stripes, and even soil hues. In general, the cutworms won’t get more than 2 inches (5 cm.) long and if you pick them up, they curl into a C shape.
Cutworms aren’t that easy to spot anyway since they hide during the day in the soil. At night, they come out and feed on the base of plants. Some types of cutworms climb up to feed higher on plant stems and the damage will be higher. In all cases, the largest larvae do the most cutworm damage.
About Cutworm Control
Cutworm control begins with prevention. Cutworm issues are usually worse in areas that haven’t been tilled. Plowing or cultivating the soil well is a big help since it kills the larvae overwintering in soil. Taking out weeds and early planting also help to prevent cutworm infestations. Picking up plant detritus is another good option since the eggs that hatch into cutworms are laid on dead plant material.
If you follow up prevention with careful monitoring, you are on your way to limiting cutworm damage. The earlier you discover the pests, the easier control of cutworms becomes since it’s easier to kill cutworm pests when they are under ½ inch (1.25 cm.) long.
How to prevent Cutworms in garden
If you are wondering how to prevent cutworms, start with nontoxic methods like plucking out and crushing the larvae or plunging them into soapy water. And when you remove plant detritus and destroy it, you will also remove and destroy any cutworm eggs laid there.
One way to keep cutworms from destroying your seedlings is to create a barrier to keep cutworms out. Place aluminum foil or cardboard collars (think toilet paper rolls) around transplants. Be sure the barrier extends into the soil to keep burrowing worms out.
You can use also use chemical pesticides to kill cutworm pests, although this should be a last resort. If you have to use pesticides, apply the product in the evening since cutworms come out for feeding.
Also, consider using organic pesticides to kill cutworms instead. A wash of bleach-free dish soap and water on your plants can also help to stop cutworms from attacking the plants. Another approach is the use of Bacillus thuringiensis (Bt), a naturally occurring bacterium that target many caterpillar-type pests. It can be an effective and environmentally friendly way to treat cutworms in the garden.


விவசாய பயிர்களின் விளைச்சலில் பொட்டாஷ் பாக்டீரியாவின் தரம்

உயிரினங்களின் இயக்கங்கள் சீரான முறையில் இயங்க சத்துக்களின் சுழற்சி இன்றியமையாதது. இச்சுழற்சியை நிலைப்படுத்தி இயக்க நுண்ணுயிர்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. இயற்கையில் மக்குதல் என்பதே சிதைவுறல் என்பதாகும். இதனால் தழை, மணி, கரிம, சாம்பல், சலிக்கா, கந்தகம், துத்தநாகம், இரும்பு போன்ற சத்துக்களின் சுழற்சி சீராக நடைபெறுகின்றது.
சத்துக்களை செடிகளுக்கு பொருத்திக் கொடுப்பதில் பாக்டீரியாவின் பங்கு மிகவும் இன்றியமையாதது.
செடிகள் குறிப்பிட்ட, பொருத்தமான பாக்டீரியாவை இணைக்கும் உயிர் வேதியல் கூறுகள்,
செடியின் வேர்களில் பாக்டீரியா ஏற்படுத்தும் மாற்றங்கள்,
செடிகளிலிருந்து சுரக்கப்படும் வேர் சத்துக்கள்,
வளர்ச்சி ஊக்கிகள்,
அங்கக அமிலங்கள்,
பசை போன்ற மாவுச் சத்துக்கள்
ஆகியவை ஒன்று சேர்ந்து நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை வேர் மண்டலங்களுக்கு ஈர்க்கின்றன. இவை இயற்கையாக காலங்காலமாய் மண்ணில் நடந்து கொண்டு இருக்கின்றன. இவ்வாறு பாக்டீரியா, வேர் பாகங்களில் இனப்பெருக்கம் செய்து, அதனை பெருக்கிக் கொள்கின்றது. இவை கூட்டாக காற்றில் இருக்கும் தழைச்சத்து மற்றும் மண்ணில் இருக்கும் இதர சத்துக்களான மணி, சாம்பல், சிலிக்கா, இரும்பு போன்றவற்றை ஈர்த்து செடிகளுக்கு கொடுக்கின்றன. பொட்டாசியம் எனப்படும் சாம்பல் சத்து, தழை, மணிச்சத்துக்களுக்கு நிகரான நன்மைகளைப் பயிர்களுக்கு அளிக்கின்றது. பொட்டாசியம் செடிகளில் பல வகைகளில் செயல்படுகின்றது. வேர் உறிஞ்சி சேர்க்கும் நீர், தாது உப்புக்கள் இலைபாகங்களில் சென்று சேர்வதற்கும் மேலும் இலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் செடிகளின் அனைத்து பாகங்களிலும் கொண்டு சேர்ப்பதற்கும் பெரும் பங்கு வகிக்கின்றன.
தானியப்பயிர்களின் தண்டுப் பகுதிகள் உறுதியடைந்து இருக்கவும் உதவுகின்றது. தழைச்சத்து இடுவதினால் செழித்து வளரும் செடிகள், அதிக பூச்சி தாக்குதலுக்கு உள்ளாகின்றன. சாம்பல், சிலிக்கா சத்து இடுவதினால் செடிகளின் கட்டமைப்பு சற்று கடினமடைவதுடன், எளிதில் நோய்க்கிருமி, பூச்சித்தாக்குதலிருந்து செடிகள் காப்பாற்றப்படுகின்றன. மேலும் செடிகளில் மாவுச்சத்து உற்பத்தி, அமினோ அமிலங்கள், புரத தயாரிப்பிலும் செயலாற்றுகின்றது. எனவே முழுமையான பயன் அடைய வேண்டுமென்றால் இச்சத்துகள் அனைத்தும் பரிந்துரைக்கப்பட்ட அளவில், தகுந்த தருணத்தில் இடுதல் அவசியமாகும்.
பொட்டாசியத்தைக் கரைக்கவல்ல பாக்டீரியாக்கள் சிலிக்கா எனப்படுகின்றன. அதன் ஆற்றலானது களிமண்ணோடு இணைந்துக் காணப்படும் சிலிக்கா, அலுமினியம், பொட்டாசியம் ஆகிய அயனிகளின் கூட்டுக்கலவைகளிலிருந்து சிலிக்காவைக் கரைத்து பொட்டாசியத்தைக் களிமண்ணிலிருந்து விடுவிக்கின்றது.
அவ்வாறு விடுவிக்கப்படும் பொட்டாசியம் நீரில் கரைந்து செடிகளினால் எளிதில் உட்கொள்ளும் நிலையில் மாற்றப்படுகின்றது. பரிமாற்ற நிலையிலுள்ள பொட்டாசியம், இவ்வகை பாக்டீரியாக்களினால் அதிக அளவில் குறுகிய காலத்தில் கிடைக்க வழி செய்கின்றது. பரிமாற்றம் இல்லாத நிலையில், கூறுகளாக விளங்கும் பொட்டாசியம் சில ஆண்டுகளில், இவ்வகை பாக்டீரியாக்களின் ஆக்ரமிப்பால் பரிமாற்ற நிலைக்கு மாற்றப்படுகின்றது. இச்செயல்கள் பாக்டீரியாவிலிருந்து வெளியாகும் அங்கக அமிலங்கள், பாலிசாக்கரைட் போன்றவையினாலும் நேர்மின் அயனி, எதிர் மின் அயனியின் பரிமாற்றங்களாலும் நிகழ்கிறது. பலவகை ஆராய்ச்சிகளில் பேசில்லஸ் மியுசிலாஜினோசஸ், பேசில்லஸ் எடாபிக்கல், பேசில்லஸ் சர்க்குலன்ஸ், பேசில்லஸ் குளோபிபார்மிஸ், பேசில்லஸ் பிளக்சிஸ், பேசில்லஸ் சபடிஸ்ரிஸ், அக்ரோபாக்டீரியம், ரேடியோபாக்டர், பிரட்சூரியா அவ்ரான்டியா போன்ற பாக்டீரிய ராசிகளும், அஸ்பர்ஜில்லஸ் நைஜர் என்னும் பூஞ்சாணமும், டோருள்ளோஸ்போரா குலோபோசர் ஆகியவை சிறந்த பொட்டாசியம் கரைத்து, பிரித்தெடுக்கும் ராசிகள் என கண்டறியப்பட்டது. பிரட்சூரியா என்னும் ராசி இந்தியாவில் பல இடங்களில் அங்ககப் பண்ணையத்தில் பயன்பாட்டில் உள்ளது. பொட்டாஷ் உரத்தின் அதிக விலையை மனதில் கொண்டு இயற்கையாக நம் மண்ணில் உள்ள சாம்பல் சத்தினையே கிடைக்கப் பெறச் செய்ய இவ்வகை பாக்டீரியாக்களை உபயோகப்படுத்தலாம்.


What is Miticide: How to its use in House or Garden Plants

What is Miticide?
A miticide is a chemical pesticide that specifically targets plant mites. Mites are tiny insects that are closely related to spiders and ticks. There are several types of mites, and once established in a plant host they can damage the health of the plant. Additionally, mites can transmit viruses and diseases to your plants. Mites can be treated with both broad-spectrum and narrow-spectrum miticides.
There are several different types of mites that can affect both indoor and outdoor plants, ranging in size and color. One of the most common and easiest to recognize are spider mites. They produce fine webbing and will feed from a wide variety of plants. Other mites, such as the spruce mite, or honey locust spider mite, target specific plants. Managing these pests is crucial to preventing widespread contamination of a garden or houseplant.
Tips for Using Miticide Sprays Safely
The following tips will come in handy when you want to know how to use a miticide correctly:
• Don’t use miticide on windy days. Wind can carry miticide to undesired areas, and it isn’t as effective because less of the product lands on the intended plant.
• Buy only as much miticide as you can use and mix only what you need at one time because it is very difficult to dispose of the remaining product. It is illegal to pour leftover miticide down the drain or onto the soil, and you can’t discard containers of miticide in the garbage.
• Pay particular attention to the undersides of leaves where mites like to hide and build their webs. This is particularly important with contact miticides where the product must come in direct contact with the mite to kill it.
• Store all miticides in their original container and out of the reach of children.


தோட்டத்தில் பயிறு வகைகளைத் தாக்கும் கொம்புப்புழுக்களை கட்டுப்படுத்துவது எப்படி?

பயிறு வகைகளை சேதப்படுத்தும் புழுக்கள் ஸ்பிரின்சிட் எனப்படும் அந்துப்பூச்சி வகையை சேர்ந்ததாகும். விவசாயிகளால் கொம்புப்புழுக்கள் என அழைக்கப்படுகிறது. இது இலைகளின் மீது ஒவ்வொரு முட்டையாக இட்டு, முட்டையிலிருந்து வெளிவந்த புழுக்கள் 2 மாதகாலம் புழுக்களாகவே வாழும். தொடர்ந்து 45 நாட்கள் தன்னை கூட்டுப்புழுவாக பூமிக்குள் புதைத்துக் கொள்ளும் பழக்கம் கொண்டது. அந்துப்பூச்சி நீலநிற தோள் பகுதியுடன், கருஞ்சாம்பல் நிறத்தில் இருக்கும். வளர்ச்சியடைந்த புழுக்கள் நன்கு சாப்பிட்ட நிலையில் மிகவும் குண்டாக இருக்கும் என்பதுடன், இப்புழுக்கள் பச்சை, மஞ்சள், பழுப்பு ஆகிய மூன்று நிறங்களில் எட்டு மஞ்சள் வரிகளுடன் காணப்படும்.
கொம்புப்புழுக்களின் வகைகள்:
i)தக்காளி கொம்புப்புழுக்கள்
ii)புகையிலை கொம்புப்புழுக்கள்
தக்காளி மற்றும் புகையிலை கொம்புப்புழுக்களை அடையாளம் காணுதல்:
கொம்புப்புழுக்கள் அவற்றின் பின்புற முனையின் முக்கிய "கொம்பு" இலிருந்து தங்கள் பெயரைப் பெறுகின்றன. தக்காளி கொம்புப்புழு ஒரு கருப்பு கொம்பு மற்றும் அதன் பக்கத்தில் எட்டு மஞ்சள் அல்லது வெள்ளை வி வடிவ அடையாளங்களைக் கொண்டுள்ளது. புகையிலை கொம்புப்புழுவில் ஒரு சிவப்பு கொம்பு மற்றும் அதன் பக்கத்தில் ஏழு கோண வெள்ளை கோடுகள் உள்ளன. அவை பச்சை நிறமாகவும், தாவர பசுமையாகவும் கலந்திருக்கும்.
பூச்சிக்கொல்லி ஸ்ப்ரேக்களை பயன்படுத்தி கொம்புப்பழுக்களை கட்டுப்படுத்தும் முறை:
கொம்புப்புழுக்கள் தாக்குதலில் உள்ள நிலங்கள் ஆடு மாடு மேய்ந்தது போல் அறிகுறி காணப்படும் என்பதால் இதை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தாவிடில் அதிகப்படியாக மகசூல் இழப்பை சந்திக்க நேரிடும். Bt ( Bacillus thuringiensis ) என்ற பாக்டீரியா பூச்சிக்கொல்லி இளம் லார்வாக்களைக் கட்டுப்படுத்துகிறது, ஆனால் முதிர்ந்த கொம்புப்புழுக்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஜெய்னோ பயோ டிபாலியேட்டர்-ஐப் பயன்படுத்தி கொம்புப்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம். 1லிட்டர் தண்ணீரை பாட்டிலில் எடுத்துக்கொள்ளவும். அதில் 5மிலி டிபாலியேட்டர்-ஐ கலக்கி நன்கு குலுக்கவும். இதை 10 - 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கவும். இதன் மூலம் கொம்புப்புழுக்களை உங்கள் தோட்டத்தில் கட்டுப்படுத்தலாம்.


Identify Mealybugs, Life Cycle & How to get rid in garden?

Mealybugs:
Mealybugs are wingless, soft-bodied insects that protect themselves with a cottony coating. They are most prominently garden pests in the south, and houseplant pests up north. They're very active as youngsters, but settle down to eat when they grow up.
The Life Cycle Of a Mealybugs:
A mealybug’s life cycle depends on the species, but as an infestation grows it can cause major harm to plants, especially for interior landscaping. Female Mealybugs go through four developmental stages—or instars—and adult female Mealybugs can lays as many as 600 eggs. The eggs hatch in 6 to 14 days, and the crawlers—the first instars—crawl to new places to feed and anchor themselves there. Male mealybugs go through five instars, feeding in their first two instars and developing wings when they mature into adults.
Life is short for adult mealybugs: females die shortly after they lay eggs, and males live for a day or two after fertilizing females. Adult male mealybugs have no mouthparts, leaving them no way to feed. They sometimes can be mistaken for fungus gnats.
How Did I Get Mealybugs?
Both indoor and outdoor plants attract mealybugs. The pests will attack a wide range of vegetation, including fruit trees, gardenias, African violets, and more. Mealybugs hide beneath leaves and flower petals, making their tiny bodies even harder to spot.
People with houseplants, gardens, and flower beds often encounter these pests. The mealybug thrives during the warm months of spring and summer.
How Do You Get Rid of Them?
If you suspect you have mealybugs infesting your plants, contact our Zaena Bio office for an inspection and to prepare an integrated mealybug treatment plan to effectively and efficiently resolve the problem.
The complexity of mealybug treatment is situational.
Depending on the number of plants that are infested and the location of the infested plants, the appropriate treatment plan may range from very simple prevention and control to somewhat more complex and widespread treatment techniques.
For the homeowner, mealybug control may not be expensive, but can be very time consuming since success depends upon a very careful inspection process.

Address

657 Tristar Tower, 3rd Floor,
Lakshmi Mills, Avinashi Rd,
Coimbatore, Tamil Nadu 641037

Contacts

Email: info@zaenabio.com
Phone: +91 924 454 2225

OPEN HOURS

Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sunday
09:00 - 21:00 09:00 - 21:00 09:00 - 21:00 09:00 - 21:00 09:00 - 21:00 09:00 - 21:00 09:00 - 21:00

GET IN TOUCH