விளை நிலங்களை தாக்கும் பூச்சிகள் மற்றும் உயிர் கொல்லிகள்
விளை நிலங்களை தாக்கும் பூச்சிகளின் வகைகள்:
1. மெல்லும் பூச்சிகள்:
இவை வேர், தண்டு, இலைகளைக் கடித்து மெல்லும் பூச்சிகள் ஆகும். எ.கா. வெட்டுக்கிளிகள், கம்பளிப் பூச்சிகள் போன்றவை.
2. உறிஞ்சும் பூச்சிகள் :
இவை செல்சாற்றினை உறிஞ்சும் பூச்சிகள். எ.கா. இலைத்தத்துப் பூச்சிகள் , அசுவனி ( தாவரப்பேன் ) போன்றவை.
3. துளைக்கும் பூச்சிகள் :
இவை தாவரத்தின் பல பகுதிகளை துளைத்து தாவரத் திசுக்களை உணவாக எடுத்துக்கொள்ளும். எ.கா. கரும்புத்துளைப்பான்.
உயிர்க்கொல்லிகள்:
தாவரங்களுக்கும், பயிர்களுக்கும் தீங்கிழைக்கும் பூச்சித் தீங்குயிரிகளை அழிக்கப் பயன்படும் வேதிப்பொருட்கள் உயிர்க்கொல்லிகள் எனப்படும்.
உயிர்க்கொல்லிகள் மூன்று வகைப்படும். அவை,
1. பூச்சிக்கொல்லிகள் ( Pesticides )
2. பூஞ்சை அல்லது காளான் கொல்லிகள் ( Fungicides )
3. களைக்கொல்லிகள் ( Herbicides )
1. பூச்சிக்கொல்லிகள் ( Pesticides )
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் வேளாண்மையில் கிட்டதட்ட 20 % பொருளாதார இழப்பு தீங்கிழைக்கும் பூச்சிகளால் ஏற்பட்டது. இவற்றை தடுக்க பூச்சிக்கொல்லிகள் தயாரிக்கப்பட்டன. பூச்சிக்கொல்லிகள் பூச்சிகளை விரட்ட, அழிக்க மற்றும் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. விவசாய நிலங்களில் இது பூச்சிகளை அழிப்பதோடு தேவையற்ற களைகளை அழிக்கவும், பூஞ்சைகளை அகற்றவும், மைக்ரோ உயிரினங்களை அழிக்கவும் உதவுகிறது. ஜெயினோ பயோ விவசாய நிலங்கள் மற்றும் வீட்டு மாடித் தோட்டத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகளை வாங்க இங்கே கிளிக் செய்யவும்.
2. பூஞ்சைக்கொல்லிகள் ( Fungicides ) :
3. களைக்கொல்லிகள் ( Herbicides ) :
பயிர்களில் தேவையற்ற களைச்செடிகளை நீக்குவதற்கு பயன்படுத்தும் வேதிப்பொருள் களைக்கொல்லிகள் ஆகும்.
எ.கா. i) டாலபேன்
ii) மெட்டாக்ளோர்
iii) 2 , 4 -D ( 2,4 - டைகுளோரோ பீனாக்ஸி அசிட்டிக் அமிலம் ).