பூச்சிக்கொல்லி மருந்துகளை உபயோகிகும்போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை
பூச்சிக்கொல்லி மருந்துகள் என்பது, மனிதனுக்கும், பயிர்களுக்கும் பாதகமான பூச்சிகளை அழித்தல், தடுத்தல், விரட்டுதல் என்பவற்றை நோக்கமாகக் கொண்ட ஏதாவதொரு பொருளையோ பொருள்களின் கலவையையோ குறிக்கும்.. பூச்சிக்கொல்லிகள், பூச்சிகளின் வளர்ச்சிக் கட்டங்களின் பல மட்டங்களில் அவற்றைத் தாக்குகின்றன. எடுத்துக்காட்டாகச் சில பூச்சிக்கொல்லிகள் பூச்சிகளின் முட்டைகளையோ, அவற்றின் குடம்பிகளையோ அழிக்கவல்லவை. இவை வேளாண்மையில் முக்கிய பங்காற்றுகிறது. மேலும் இருபதாம் நூற்றாண்டின் வேளாண் விளைச்சலைப் பெருக வழிவகுத்துள்ளன. அனைத்துப் பூச்சிக்கொல்லிகலுமே சுற்றுச்சூழலை மாற்றும் சக்தி கொண்டவை.
இப்போது வேளாண்மைக்காக பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தும் போது செய்ய கூடியது, செய்ய கூடாதது என்னென்ன என்பது பற்றி பார்ப்போம்.
செய்ய வேண்டியவை
1. பூச்சிக்கொல்லி மருந்துகளை சரியான பரிந்துரைக்கப்பட்ட அளவே உபயோகிப்பதுடன் பரிந்துரைக்கப்பட்ட அளவே தண்ணீரில் கலந்து கரைசல் தயாரிக்கவேண்டும்
2. பூச்சிக்கொல்லி மருந்தினை மிதமான தட்பவெட்ப நிலை மற்றும் அமைதியான சூழல் உள்ள நாட்களில் பயிர்களுக்கு தெளிக்கவேண்டும்
3. பொதுவாக வெயில் அடிக்கும் நாட்களில் பூச்சிக்கொல்லி அடிக்க வேண்டும்
4. பரிந்துரைக்கப்பட்ட தெளிப்பானை தனித்தனியே ஒவ்வொரு கரைசலுக்கும் உபயோகிக்கவேண்டும்
5. காற்றடிக்கும் திசையில் பூச்சிக்கொல்லி மருந்தினை தெளிக்கவேண்டும்
6. பூச்சிக்கொல்லி மருந்தினை தெளித்தபின்பு தெளிப்பான் மற்றும் வாளியினை சோப்பு கொண்டு சுத்தமான நீரினால் கழுவவும்
7. பூச்சிக்கொல்லி மருந்தினை தெளித்தவுடன் இதர வேலையாட்கள் மற்றும் விலங்குகளை வயலுக்குள் அனுமதிக்கக்கூடாது
செய்யக்கூடாதவை
1. பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமான அளவு பூச்சிக்கொல்லி மருந்துகளை உபயோகிக்கக்கூடாது
2. பூச்சிக்கொல்லி மருந்தினை அதிக வெப்பத்துடன் கூடிய வெயில் அதிகமாக உள்ள நாட்களிலும் அதிகம் காற்றடிக்கும் நாட்களிலும் தெளிக்கக்கூடாது
3. மழைக்காலத்திற்கு முன்பும் மழை பெய்த பின்பும் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிக்கக்கூடாது
4. பேட்டரியின் மூலம் இயங்கும் ULV தெளிப்பானில் அடர்த்தி மிகுந்த பூச்சிக்கொல்லி மருந்து கரைசலை உபயோகிக்கக்கூடாது
5. காற்றடிக்கும் திசைக்கு எதிர் திசையில் பூச்சிக்கொல்லி மருந்தினை அடிக்கக்கூடாது
6. பூச்சிக்கொல்லி மருந்தினை தெளித்த பின்பு தெளிப்பான் மற்றும் வாளியினை நன்கு கழுவிய பின்பும் வீட்டு உபயோகத்திற்கு உபயோகிக்கக்கூடாது
7. பாதுகாப்பு கவச உடைகளை அணியாமல், பூச்சிக்கொல்லி மருந்தடித்த வயலுக்குள் செல்லக்கூடாது